search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பம் விவசாயி"

    கம்பம் அருகே பணத் தகராறில் விவசாயி மீது தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 60). இவருக்கும் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த காமாட்சியப்பன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    காமாட்சியப்பன் தனது நண்பர்களான ரவிச்சந்திரன், கர்ணன் ஆகியோருடன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் நடராஜன் ரூ.1½ லட்சம் முதலீடு செய்திருந்தார். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    எனவே தனது பணத்தை திரும்ப வழங்க கோரி நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இதனால் அவர் மீது காமாட்சியப்பன் மேலும் ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்த நடராஜனை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே குடும்ப பிரச்சினையில் தங்கையை தாக்கி தாயின் உடலை தூக்கி சென்ற விவசாயி உள்பட அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி புஷ்பம் (வயது51). இவரது தாய் கருப்பாயி கடந்த 15 ஆண்டுகளாக இவரது பராமரிப்பிலேயே இருந்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி கருப்பாயி இறந்து விட்டார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கருப்பாயி மகன் ராசு என்பவர் தனது தாய் உடலை எடுத்து சென்று தனது வீட்டில் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு புஷ்பம் இத்தனை நாட்கள் நான்தான் அவருக்கு எல்லா வி‌ஷயங்களையும் செய்து வந்தேன். எனவே இறுதி காரியத்தையும் நானே செய்து விடுகிறேன் என்றார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பத்தை தாக்கி கருப்பாயி உடலை எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் அபகரித்து சென்றதாக புஷ்பம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசு, மனைவி முருகேஸ்வரி, மகன்கள் சுரேந்தர், பிரசாத், மருமகள் உமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×